பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் சபலென்கா

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
கோப்புப்படம் AFP
கோப்புப்படம் AFP
Published on

ரியாத்,

உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் 'பர்பிள்' பிரிவில் நடந்த லீக் ஆட்டம் நம்பர் ஒன் வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) ஜாஸ்மின் பாவ்லினியுடன் (இத்தாலி) மோதினார்.

இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றதுடன், அரையிறுதி சுற்றையும் உறுதி செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com