டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிப்பு

டென்னிஸ் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார்.
கோப்புப் படம் AFP
கோப்புப் படம் AFP
Published on

நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் வீரர்கள் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார்.

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 2-வது சுற்றுடன் வெளியேறிய போதிலும் அவரது 'நம்பர் ஒன்' இடத்துக்கு ஆபத்து இல்லை. ஜோகோவிச் இதுவரை 366 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார்.

2-வது இடத்தில் டேனில் மெட்விடேவும் (ரஷியா), 3-வது இடத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), 4-வது இடத்தில் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 5-வது இடத்தில் சிட்சிபாசும் (கிரீஸ்) உள்ளனர். மான்ட்கார்லோ டென்னிசில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஸ்பெயின் வீரர் டேவிடோவிச்போகினா 19 இடங்கள் எகிறி 27-வது இடத்தை பிடித்துள்ளார்.

பெண்கள் பிரிவில் டாப்-3 இடங்களில் முறையே இகா ஸ்வியாடெக் (போலந்து), கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்) மாற்றமின்றி தொடருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com