ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இவர் 2-வது சுற்று ஆட்டத்தில் டிரிஸ்டன் போயர் உடன் மோத உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான் டி சாண்ட்ஸ்கல்ப் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டி மினார் 6-1, 7-5 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் டிரிஸ்டன் போயர் உடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com