ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் 4-வது சுற்றுக்கு தகுதி

இவர் 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோத உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் 4-வது சுற்றுக்கு தகுதி
Published on

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா) உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை பிரான்சிஸ்கோ செருண்டோலோ கைப்பற்றி டி மினாருக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுதாரித்து கொண்டு விளையாடிய டி மினார் அடுத்த 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் 7-5, 7-6, 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற டி மினார் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

இவர் 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com