ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார். இதில் 7-6 (7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஹூபர்ட் ஹர்காக்ஸை போராடி வீழ்த்தி மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com