ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 20-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து விலகுவதாக முன்னணி கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்த 19 வயதான பியான்கா, அதன் பிறகு அக்டோபர் மாதம் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் விளையாடிய போது கால் முட்டியில் காயமடைந்தார். இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய ஓபனை தவற விடுவதாக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பியான்கா கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com