ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்
Published on

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி நாட்டின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில் முதல் செட்டை கைப்பற்ற கடுமையாக போராடிய இரு வீரர்களில் அலெக்சாண்டர் 6-7(6) வெற்றி வாய்ப்பினை பெற்றார். எனினும், அடுத்தடுத்த செட்களை கைப்பற்றிய ஜோகோவிச் போட்டியில் வெற்றி பெற்றார்.

ஏறக்குறைய 3 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் 6-7(6), 6-2, 6-4, 7-6(8) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அறிமுக வீரராக விளையாடிய அஸ்லான் கரத்சேவ் உடன் அடுத்த போட்டியில் விளையாடுகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com