ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

வரும் 21ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச் - கார்லஸ் அல்காரஸ் மோத உள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
Published on

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) - செக் குடியரசின் ஜிரி லெஹக்கா உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜிரி லெஹக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். வரும் 21ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com