ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; இந்திய வீரர் சுமித் நாகல் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்..!

டென்னிசில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மெல்போர்ன்,

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் நாகல் 6-4, 6-2, 7-6 (7-5) செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com