ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி..!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 14-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 14-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் பிரான்ஸ் வீரர் ஜெப்ரி பிளாங்கனேக்ஸ் உடன் மோதினார். இதில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் நாகல் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜெப்ரி பிளாங்கனேக்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com