

மெல்போர்ன்,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென் னிஸ் தொடர் மெல்போர்னில் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து 5 கிராண்ட்ஸ் லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் 'நம்பர் ஒன்' வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி) விலகி இருக்கிறார். அவருக்கு வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தை சரிசெய்ய எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்காததால் தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து மீண்டு வர சுமார் 3 மாதம் பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவர் ஒதுங்கும் முடிவை எடுத் துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜானிக் சினெர் பங்கேற்க மாட்டார் என்பதை ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க நிர்வாகி ஆன்ட்ரு அப்டோ உறுதிப்படுத்தி இருக்கிறார்.
25 வயது ஜானிக் சினெர் ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் சாம்பியன் பட் டத்தை தக்கவைத்த பிறகு காயம் காரணமாக எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை இழந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 2024, 2025-ல் ஆஸ்திரே லிய ஓபன் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய சினெர் இந்த ஆண்டு அரைஇறுதியில் தோற்று இருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.