ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபாகினா அரை இறுதிக்கு முன்னேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனையை வீழ்த்தி எலினா ரைபாகினா அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபாகினா அரை இறுதிக்கு முன்னேற்றம்
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பேட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பேட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் எலினா ரைபாகினா(கஜகஸ்தான்)-ஜெலேனா ஒஸ்டாபென்கோ(லாத்வியா) இருவரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி எலினா ரைபாகினா அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். அதே சமயம் கலப்பு இரட்டையர் கால் இறுதி சுற்றில் ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்ஸா-ரேகன் பேபண்ணா அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com