ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரைபகினாவை வீழ்த்தி மேடிசன் கீஸ் காலிறுதிக்கு தகுதி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் மேடிசன் கீஸ் - ரைபகினா பலப்பரீட்சை நடத்தினர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரைபகினாவை வீழ்த்தி மேடிசன் கீஸ் காலிறுதிக்கு தகுதி
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) - ரைபகினா (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்தினர்.

சமபலம் வாய்ந்த இரு வீராங்கனைகளும் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் முதல் செட்டை கீஸ் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை ரைபகினா கைப்பற்றினார். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. அந்த செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 6-3, 1-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கீஸ் காலிறுதியில் ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com