ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!

டென்னிசில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
Image Grab in video posted by @AustralianOpen
Image Grab in video posted by @AustralianOpen
Published on

மெல்போர்ன்,

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ள இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் மெத்வதேவ் பிராசின் டெரன்ஸ் ஆத்மானே உடன் மோதினார். இதில் முதல் மூன்று செடுகள் முடிவில் 5-7, 6-2, 6-4 என்ற புள்ளி கணக்கில் மெத்வதேவ் முன்னிலையில் இருந்தார்.

4வது செட்டில் 1-0 என மெத்வதேவ் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக டெரன்ஸ் ஆத்மானே வெளியேறினார். இதன் காரணமாக மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com