ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் முன்னணி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி..!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது நிலை வீராங்கனையான துனிசிய நாட்டை சேர்ந்த ஆன்ஸ் ஜபேர், ரஷியாவை சேர்ந்த 16 வயதே ஆன மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் மிர்ரா ஆண்ட்ரீவா யாரும் எதிர்பாராத விதமாக ஆன்ஸ் ஜபேரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். வெறும் 54 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் மிர்ரா ஆண்ட்ரீவா 6-2 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று ஆன்ஸ் ஜபேருக்கு அதிர்ச்சி அளித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com