பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றில் இருந்து விலகிய சிட்சிபாஸ்

ஆட்டத்தின் முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் ஆர்தர் பில்ஸ் முன்னிலை பெற்றார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றில் இருந்து விலகிய சிட்சிபாஸ்
Published on

பார்சிலோனா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்று உள்ளனர். கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் ஆர்தர் பில்ஸ் முன்னிலை பெற்றார்.

அப்போது சிட்சிபாஸ் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீரென அறிவித்தார். இதையடுத்து ஆர்தர் பில்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஆர்தர் பில்ஸ், கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோத உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com