பெர்லின் ஓபன் டென்னிஸ்: எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேற்றம்

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பெர்லின்,

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைபகினா 6-4, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரைபகினா பெலாரசின் விக்டோரியா அசரென்கா உடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com