பெர்லின் ஓபன் டென்னிஸ்; ரைபகினா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

எலினா ரைபகினா (கஜகஸ்தான்), அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகர் உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெர்லின்,

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகர் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரைபகினா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஆஷ்லின் க்ரூகரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com