கனடா ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் அர்ஜெண்டினா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்  
கோப்புப்படம்  
Published on

டொராண்டோ,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரேஸ் மோல்டெனி - ரோம்போலி மாக்சிமோகோன்சலஸ் ஜோடி, ஜான்-பேட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - பெர்னாண்டோ ரொம்போலி (பிரேசில்) ஜோடியை எதிர்கொண்டது.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரேஸ் மோல்டெனி - ரோம்போலி மாக்சிமோகோன்சலஸ் ஜோடி 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் ஜான்-பேட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - பெர்னாண்டோ ரொம்போலி (பிரேசில்) ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com