

சென்னை,
முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் 3-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் முந்தைய நாள் இரவில் இருந்தே தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை திட்டமிட்ட நேரத்தில் தொடங்க முடியவில்லை. மோசமான வானி லையால் முதல் நாள் ஆட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து 2-வது நாள் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 16 ஒற்றையர் ஆட்டங்கள் நடக்கின்றன.
அதற்கு ஏற்ப காலை 11 மணியில் இருந்தே போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள் ளது. ஒற்றையர் முதலாவது சுற்றில் தமிழக வீராங்கனை 17 வயதான மாயா ரேவதி, போலந்தின் கேதர்ஜினா காவாவு டன் மோதுகிறார். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி, இங்கிலாந்தின் ஜோடி பர்ரேஜியையும், சஹஜா யமலா பள்ளி, சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டெர்ட்டையும் எதிர்கொள்கிறார்கள். இதே போல் சுவிட்சர்லாந்தின் ஜில் டைச் மேன், சீனதைபேயின் ஜோவான்னா கார்லாண்டுடன் மல்லுக்கட்டுகிறார்.