சென்னை ஓபன் : இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

முதல் இந்திய இணை என்ற பெருமையை பெற்றனர்.
சென்னை ஓபன் : இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on: 

சென்னை,

3-வது சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடி யத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர்-ருதுஜா போசேல் இணை. வெரோனிகா பால்கோவ்ஸ்கா (போலந்து)-அலானா ஸ்மித் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வைஷ்ணவி அத்கர்-ருதுஜா கூட்டணி 6-2, 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வெரோனினா-அலானா ஜோடியை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டி

இதன் மூலம் அவர்கள் டபிள்யூ.டி.ஏ. டூர் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய இணை என்ற பெருமையை பெற்றனர். மற்றொரு அரைஇறுதியில் சுவிட்சர்லாந்தின் நைமா கரமோகோ-சிமோனா வால்டெர்ட் ஜோடி 6-4. 6-4 என்ற நேர்செட்டில் ஹாவெர்லாக் (நெதர்லாந்து)-பன்னா உத்வர்தி (ஹங்கேரி) இணையை தோற்கடித்து இறுதிப் போட்டியை எட்டியது.

ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், போட்டி தரநிலையில் முதலிடம் வகிப்பவருமான ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் மான்ட்கோமெரியை (அமெரிக்கா) விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரைஇறுதியில் போலந்து வீராங்கனை மாக்டா லினெட் சரிவில் இருந்து மீண்டு 2-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அனஸ்டசியா ஜகரோவாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

X