சென்னை ஓபன் டென்னிஸ்: தமிழக வீரர் தோல்வி

தமிழக வீரரான ராம்குமார் , ஜெய் கிளார்க்கிடம் (இங்கிலாந்து) மோதினார் .
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரரான ராம்குமார் , ஜெய் கிளார்க்கிடம் (இங்கிலாந்து) மோதினார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 3-6, 5-7 என்ற நேர் செட்டில் ஜெய் கிளார்க்கிடம் தோற்று வெளியேறினார்.

ஒற்றையரில் தோல்வி அடைந்த ராம்குமார், அடுத்து இரட்டையர் பிரிவில் சகெத் மைனெனியுடன் இணைந்து விளையாட உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com