

சென்னை,
3-வது சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடி யத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக் கிறது. மொத்தம் ரூ.2.70 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டி தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் நடைபெறுகிறது. போட்டியின் ஒற்றையர் பிரதான சுற்றில் நேரடியாக களம் காணும் 22 நாடு களை சேர்ந்த 23 வீராங்கனைகளின் பட்டியலை போட்டி அமைப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.
இதன்படி நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 49-வது இடம் வகிப்பவரு மான இந்தோனேசியா வீராங்கனை ஜேனிஸ் டிஜென் இந்த போட்டியில் மீண் டும் பங்கேற்கிறார். போட்டி தரநிலையில் அவருக்கு முதலிடம் அளிக்கப்பட் டுள்ளது. பிரெஞ்சு ஓபன் ஜூனியர் சாம்பியனும், தரவரிசையில் 61-வது இடத் தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் லில்லி டேக்கர், 63-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை லான்லனா தாராடுடீ. ஹங்கேரியின் பன்னா உத்வர்டி (79-வது இடம்), போலந்தின் மாக்டாலினெட் (80-வது இடம்), கஜ கஸ்தானின் புதின்சேவா உள்ளிட்டோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.