சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சாய் சமர்தி தோல்வி

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

இதன் தகுதி சுற்று போட்டி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஒற்றையர் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் சாய் சமர்தி, சவ்ஜன்யா பவிசெட்டி, ரியா பாட்டியா, லட்சுமி பிரபா, ருதுஜா போசாலி உள்பட 24 பேர் பங்கேற்கிறார்கள். 2 சுற்றுகள் கொண்ட தகுதி சுற்று முடிவில் 6 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்கள். தகுதி சுற்று ஆட்டங்கள் இரு நாட்களும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்திய வீராங்கனை சாய் சமர்தி தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவை எதிர்கொண்டார்.

இதில் சாய் சமர்தி 1-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com