

டெல்லி,
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், மணிலாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.