சீன ஓபன்: கரோலினா முச்சோவா காலிறுதிக்கு முன்னேற்றம்

நவோமி ஒசாகாவுக்கு (ஜப்பான்) அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

சீன ஓபன்: கரோலினா முச்சோவா காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on: 

புதுடெல்லி,

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவா முதல் மற்றும் கடைசி செட்டில் சரிவில் இருந்து மீண்டு வந்ததுடன் 7-5, 1-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையான நவோமி ஒசாகாவுக்கு (ஜப்பான்) அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

மிரா ஆன்ட்ரீவா, எகதெரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷியா), நிகோலா பார்துன்கோவா (செக்குடியரசு) ஆகியோரும் தங்களது ஆட்டங் களில் வெற்றி பெற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com