சீனா ஓபன் டென்னிஸ்: கோகோ காப், இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
கோகோ காப்
Published on: 

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் கோகோ காப், இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கோகோ காப் வெற்றி

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் சுன் ஜின்ரானை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கோகோ காப், 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுன் ஜின்ரானை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இகா ஸ்வியாடெக்கும் முன்னேற்றம்

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் போலந்தின் முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோஷியாவின் டோன்னா வெகிச்சை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 4-6 என இழந்த ஸ்வியாடெக், பின்னர் சிறப்பாக செயல்பட்டு 7-6 (7-0), 6-2 என்ற செட் கணக்கில் அடுத்தடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் டோன்னா வெகிச்சை வீழ்த்திய இகா ஸ்வியாடெக், சீனா ஓபனில் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com