சீனா ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) - அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் டி மினாரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னெர், அமெரிக்காவின் லெர்னர் டியென் உடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com