சீனா ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பீஜிங்,

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), யுஞ்சோகெட் பு (சீனா) உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜன்னிக் சின்னெர் 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் யுஞ்சோகெட் பு-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com