சீனா ஓபன் டென்னிஸ்: லிண்டா நோஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா - பிரிட்டனின் சோனய் கர்தல் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய லிண்டா நோஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சோனய் கர்தலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com