சீனா ஓபன் டென்னிஸ்: காயத்தால் அரையிறுதியில் விலகிய மெத்வதேவ்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லீனர் டீன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய அமெரிக்க வீரர் லீனர் டீன் 7-5 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அமெரிக்க வீரர் 4-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, காயம் காரணமாக மெத்வதேவ் போட்டியில் இருந்து விலகினார். இதனால் அமெரிக்க வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com