சீன ஓபன் டென்னிஸ்: சபலென்கா, நவோமி ஒசாகா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

நவோமி ஒசாகா, ரஷியாவின் மரியா திமோபீவாவை எதிர்கொண்டார்.
சீன ஓபன் டென்னிஸ்: சபலென்கா, நவோமி ஒசாகா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on: 

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

சபலென்கா அபார வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் அரினா சபலென்கா, மெக்சிகோவின் ரெனாட்டா சராசுவாவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

நவோமி ஒசாகாவுக்கும் வெற்றி

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா, ரஷியாவின் மரியா திமோபீவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒசாகா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் சபலென்கா மற்றும் நவோமி ஒசாகா இருவரும் சீனா ஓபன் தொடரின் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com