சீனா ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

சபலென்கா, செக்குடியரசின் 20 வயதே ஆன நிகோலா பார்துன்கோவாவை எதிர்கொண்டார்.
சீனா ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி
Published on: 

புதுடெல்லி,

சீனா ஓபனில் இன்று காலை பெண்களுக்கான 3-வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) போட்டி நடைபெற்று வருகிறது. 2வது சுற்றில் போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாராஸ் நாட்டைச் சேர்ந்த சபலென்கா, 26-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் 20 வயதே ஆன நிகோலா பார்துன்கோவாவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சபலென்கா 4-6, 3-6 என நேர்செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

மற்றொரு போட்டியில் யாஸ்ட்ரிம்ஸ்காவை ஆஸ்திரேலியா வீராங்கனை சிஞ்சா கிராஸ் 6-1, 6-4 என எளிதாக வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com