

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, சீனாவின் குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய குயின்வென் ஜெங், 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தத் தோல்வியின் மூலம் முன்னணி வீராங்கனையான எலினா ஸ்விடோலினா சீனா ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார். சொந்த மண்ணில் விளையாடிய குயின்வென் ஜெங், காலிறுதியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பது சீன டென்னிஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.