சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கோகோ காப், சாரா அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோகோ காப் , மார்த்தா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்:  கோகோ காப், சாரா அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோ 7-6 (7-2). 7-5 என்ற நேர்செட்டில் லோரென்ஜா முசெட்டியை (இத்தாலி) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பிரன்டன் நகாஷிமா 7-6 (11-9), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரரும், சகநாட்டவருமான டெய்லர் பிரிட்சை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் மார்த்தா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு காலிறுதியில் தரவரிசையில் செக்குடியரசு வீராங்கனை சாரா பெஜ்லெக் சரிவில் இருந்து மீண்டு 3-6, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் முன்னாள் சாம்பியனான மேடிசன் கீசுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து அரையிறுதியை எட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com