சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்...!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Image Courtesy: @CincyTennis
Image Courtesy: @CincyTennis
Published on

சின்சினாட்டி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கெயில் மான்பில்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொள்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com