சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் எரின் ரூட்லிப் ஜோடி சாம்பியன்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் எரின் ரூட்லிப் ஜோடி சாம்பியன்
x

Image Courtesy: @CincyTennis

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் எரின் ரூட்லிப் - கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி ஜோடி, சீனாவின் குவோ ஹன்யு - ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா பனோவா ஜோடியுடன் மோதியது.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய எரின் ரூட்லிப் ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் குவோ ஹன்யு - அலெக்ஸாண்ட்ரா பனோவா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

1 More update

Next Story