சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

சின்சினாட்டி,

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜன்னிக் சின்னெர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மைக்கேல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஜன்னிக் சின்னெட் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com