சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோத உள்ளார்.
Image Courtesy: @NBOtoronto
Image Courtesy: @NBOtoronto
Published on

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கனடாவின் லேலா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 7-5, 6-7 (1-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கனடாவின் லேலா பெர்னாண்டஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோத உள்ளார். இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக் - பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோர் மோத உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com