சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா வெற்றி

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டர்ட் உடன் மோதினார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா வெற்றி
Published on

சென்னை,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டர்ட் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com