சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி கண்ட டாமி பால்

கோப்புப்படம்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
சின்சினாட்டி,
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டாமி பால் (அமெரிக்கா) - பிரான்சின் அட்ரியன் மன்னாரினோ உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் டாமி பால் கைப்பற்றினார். இதையடுத்து நடந்த 2 மற்றும் 3வது செட்களில் அபாரமாக செயல்பட்ட அட்ரியன் மன்னாரினோ 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டாமி பாலை வீழ்த்தினார்.
இறுதியில் அட்ரியன் மன்னாரினோ 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டாமி பாலை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். அதிர்ச்சி தோல்வி கண்ட டாமி பால் தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :
Next Story






