

சென்னை,
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சில் வேலண்டின் ரோயர் உடன் மோதினார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 7-6 (7-4), 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.