சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி

யூகி பாம்ப்ரி ஜோடி, லூகாஸ் மெய்ட்லர்- பிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடி உடன் மோதியது.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி
Published on

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர்- போர்ச்சுகல்லின் பிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடி உடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3 6-7 (1-7), 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் யூகி பாம்ப்ரி ஜோடி இழந்து தொடரில் இருந்து வெளியேறியது

X

Daily Thanthi
www.dailythanthi.com