

சென்னை,
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3-6, 6-3, 6-3 என வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3வது சுற்றில் ஸ்வரேவ் பிரான்சின் டெரன்ஸ் ஆட்மனே உடனும் மோதுறார்.