டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இத்தாலி, கனடா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இத்தாலி, கனடா முன்னேறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மலாகா,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் மலாகா நகரில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவும் இத்தாலியும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 2-1 என்ற கேம் கணக்கில் இத்தாலி வென்றது.

இதன் மூலம் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை தொடரின் அரையிறுதியில் இத்தாலி கால்பதித்து உள்ளது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கனடாவும் ஜெர்மனியும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியை 2-1 என்ற கேம் கணக்கில் கனடா வீழ்த்தியது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் கனடா, இத்தாலியுடன் மோத உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com