நிங்போ ஓபன் பட்டத்தை தக்கவைத்த முதல் வீராங்கனை... சாதனை படைத்த ரைபகினா

இது அவர் வெல்லும் 15-வது டபிள்யூ.டி.ஏ. பட்டமாகும்.
ரைபகினா
Published on: 

நிங்போ,

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கஜகஸ்தானின் ரைபகினா வென்றார்.

இறுதிப்போட்டியில் ஆதிக்கம்

2026-ம் ஆண்டுக்கான நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், கஜகஸ்தானின் ரைபகினா கனடாவின் லேலா பெர்னாண்டஸை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ரைபகினா, பெர்னாண்டஸுக்கு நெருக்கடி அளித்தார். இரு செட்களிலும் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, எளிதாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

15-வது டபிள்யூ.டி.ஏ. பட்டம்

இதன் மூலம் நிங்போ ஓபன் பட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். இது அவரது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் வெல்லும் 15-வது டபிள்யூ.டி.ஏ. பட்டமாகும்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com