துபாய் சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவுடன் மோதினார்.
கோப்புப்படம் AFP
கோப்புப்படம் AFP
Published on

துபாய்,

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), 14-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 3-6, 3-6 என்ற செட் கணக்கில் மிரா ஆன்ட்ரீவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆன்ட்ரீவா அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் 17 வயதான மிரா ஆன்ட்ரீவா துபாய் ஓபனில் அரைஇறுதியை எட்டிய இளம் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com