துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ்: ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் சாம்பியன்

துபாய் ஓபன் சர்வதேச டென்னிசில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் மகுடம் சூடினார்.
துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ்: ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் சாம்பியன்
Published on

துபாய்,

துபாய் ஓபன் சர்வதேச டென்னிசின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 7-ம் நிலை வீரரான ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஜிரி வெஸ்லியை வீழ்த்தி மகுடம் சூடினார். மேலும் அவருக்கு சுமார் ரூ.4 கோடி பரிசுத்தொகையும் கிடைத்தது.

இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கால்இறுதி சுற்றுடன் தோழ்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com