துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உகோ ஹம்பர்ட் சாம்பியன்

இந்த தொடரின் கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

துபாய்,

துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் டென்னிஸ் வீரர் உகோ ஹம்பர்ட் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி உகோ ஹம்பர்ட் சாம்பியன் பட்டம் வென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com