ஈஸ்ட்போர்ன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
Image : AFP
Image : AFP
Published on

லண்டன்,

ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிச் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்ஸ் 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின்அலெக்சாண்டர் வுகிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com